/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜெய்ஹிந்த்புரம் பிரிவு பாலம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
/
ஜெய்ஹிந்த்புரம் பிரிவு பாலம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
ஜெய்ஹிந்த்புரம் பிரிவு பாலம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
ஜெய்ஹிந்த்புரம் பிரிவு பாலம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
ADDED : மே 30, 2025 03:50 AM
மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் ரயில்வே பாலத்திற்கு 2006ல் அனுமதி வழங்கி, 2011ல் கட்டுமானம் துவங்கி, 2015ல் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது. மாடக்குளம், டி.வி.எஸ்., நகர் பகுதியை இணைக்கும் வகையில் துவங்கிய இப்பாலத்தில் சுரங்கப்பாதையும் உள்ளது.
இப்பாலத்தின் ஒருபிரிவு கிளை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தரையிறங்குகிறது. இப்பணிக்கான நிலஎடுப்பு பணிகள் தாமதமானதால் கட்டுமான பணிகள், மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் பணி நிறைவுற்றது.
மொத்தத்தில் இப்பாலம் ரூ.68.38 கோடி மதிப்பில் 47 துாண்கள், 51 கண்களுடன், 730 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே லைனுக்கு வடபகுதியில் உள்ள மதுரை நகரையும், தென்பகுதி நகரையும் இணைப்பதால் பழங்காநத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.இப்பாலத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இதையடுத்து அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா ஆகியோர் பாலத்தை பார்வையிட்டனர்.