/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் கோப்பை போட்டி தேதி மாற்றம்
/
முதல்வர் கோப்பை போட்டி தேதி மாற்றம்
ADDED : ஆக 31, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள முதல்வர் கோப்பைக்கான மாவட்ட சிலம்பப் போட்டிகள் செப்.3 முதல் 11க்கு மாற்றப்பட்டுள்ளது.
செப்.3ல் கல்லுாரி மாணவிகளுக்கான சிலம்பப் போட்டி, செப்.4ல் பள்ளி மாணவிகளுக்கு, செப்.6ல் பள்ளி மாணவர்களுக்கு, செப்.10ல் கல்லுாரி மாணவர்களுக்கு செப்.11ல் பொதுப்பிரிவு ஆடவர், மகளிருக்கு போட்டிகள் நடக்க உள்ளன.
போட்டி நடக்கும் நாளன்று காலை 6:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் மைதானம் வரவேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.