/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் பாதியில் நிறுத்தப்பட்ட முதல்வர் கோப்பை சிலம்ப போட்டி விதிமுறை தெரியாத நடுவர்களால் போட்டியாளர்கள் போராட்டம்
/
மதுரையில் பாதியில் நிறுத்தப்பட்ட முதல்வர் கோப்பை சிலம்ப போட்டி விதிமுறை தெரியாத நடுவர்களால் போட்டியாளர்கள் போராட்டம்
மதுரையில் பாதியில் நிறுத்தப்பட்ட முதல்வர் கோப்பை சிலம்ப போட்டி விதிமுறை தெரியாத நடுவர்களால் போட்டியாளர்கள் போராட்டம்
மதுரையில் பாதியில் நிறுத்தப்பட்ட முதல்வர் கோப்பை சிலம்ப போட்டி விதிமுறை தெரியாத நடுவர்களால் போட்டியாளர்கள் போராட்டம்
ADDED : ஆக 28, 2025 11:33 PM

மதுரை: மதுரையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான சிலம்பப்போட்டி விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என மாணவிகள், பயிற்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று பெண்களுக்கான சிலம்பப்போட்டியில் பங்கேற்பதற்காக நுாற்றுக்கணக்கான மாணவிகள் வந்திருந்தனர்.
காலையில் போட்டி துவங்கிய சில நிமிடங்களிலே நிறுத்தப்பட்டது. பயிற்சியாளர்களும், மாணவிகளும் போட்டிக்கான விதிகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை என மைதானத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலம்பம் பற்றிய முன்அனுபவம் இல்லாதவர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறினர்.
கண்ணியத்துடன் நடத்த வேண்டும் இந்தியன் சிலம்பப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன் கூறியதாவது: மதுரையில் முதல்வர் கோப்பை போட்டி 3 ஆண்டுகளாக நடக்கிறது. இந்தாண்டு காலை 6:00 மணிக்கெல்லாம் வரச்சொல்லியதால் மாணவிகள் பெற்றோருடன் வந்தனர். குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை.
காலை 11:00 மணிக்கு தான் ஜூஸ், பிஸ்கட் வழங்கினர். வெயிலில் போதிய குடிநீர், உணவு இன்றி விளையாடினால் நல்ல போட்டியாளர் கூட சோர்ந்துவிடுவர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் சிலம்ப மாஸ்டர்களை உடன்சேர்த்து இப்போட்டியை நடத்த வேண்டும். மாஸ்டர்களுக்கு தான் பாய்ண்ட்ஸ் வழங்குவதற்கான முறைகள், தன்மைகள் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் இதே பிரச்னை நீடிக்கிறது. முதல்வர் கோப்பை என்ற பெயருக்கேற்றார் போல் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றார்.
வழக்கறிஞர் விஜயராஜ் கூறியதாவது: கல்வித்துறையின் சார்பில் தேர்ச்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களை வைத்து போட்டிகளை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அதற்கான உத்தரவு வாங்கியுள்ளோம். சிலம்ப போட்டி நடத்த ஒரு மைதானத்திற்கு 10 நடுவர்கள் இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு மொத்தமே 5 நடுவர்கள் தான் உள்ளனர். அங்கீகாரம் பெற்ற நடுவர்களையே நியமிக்க வேண்டும்.
போட்டியில் நடுவர்கள் யாரிடமும் விசில் கூட இல்லை. சிலம்ப போட்டிக்கு நடுவர்கள் வைத்திருக்கும் போதுமான கார்டுகளும் இல்லை. இதுகுறித்து கேட்டால் எந்த பள்ளி என்று கேட்டு மிரட்டுகின்றனர் என்றார்.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறுகையில், போட்டிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  சிலம்ப போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

