/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழந்தை திருமண விழிப்புணர்வு சுவரோவியங்கள் கல்லுாரி மாணவிகள் அசத்தல்
/
குழந்தை திருமண விழிப்புணர்வு சுவரோவியங்கள் கல்லுாரி மாணவிகள் அசத்தல்
குழந்தை திருமண விழிப்புணர்வு சுவரோவியங்கள் கல்லுாரி மாணவிகள் அசத்தல்
குழந்தை திருமண விழிப்புணர்வு சுவரோவியங்கள் கல்லுாரி மாணவிகள் அசத்தல்
ADDED : மார் 05, 2026 04:46 AM

மதுரை: மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாத்திமா கல்லுாரி சுற்றுச்சுவரில் 185 மாணவிகள் 37 வகையான ஓவியங்களை வரைந்தனர்.
குழந்தை திருமணத்தை தடை செய்வது குறித்து மத்திய அரசு நிதியின் கீழ் ஓவியப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. ஓவியங்கள் அழியாமல் நிரந்தரமாக பார்க்கும் வகையில் பாத்திமாக கல்லுாரியுடன் இணைந்து புதிய முயற்சி மேற்கொண்டதாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் காந்திமதி தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மகளிர் தினவிழா, குழந்தை திருமணம் விழிப்புணர்வுக்கு ஊர்வலமாக செல்லும் போது ஒரு நாளில் அந்த நிகழ்வு முடிந்து விடுகிறது. அதனால் ஓவியப் போட்டியை தேர்ந்தெடுத்தோம். அதிலும் மெயின் ரோட்டில் உள்ள கல்லுாரி வெளிப்புறச் சுவரில் ஓவியமாக வரைய திட்டமிட்ட போது பாத்திமா கல்லுாரி முதல்வர் பாத்திமா மேரி அனுமதி தந்தார்.
கல்லுாரியின் வெளிப்புறச் சுவரில் வரைந்தால் தினமும் அந்தப் பாதையை கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என நினைத்தோம். ஒரு ஓவியத்திற்கு 5 மாணவிகள் வீதம் நான்குக்கு நான்கடி அளவு இடம் தேர்வு செய்து 37 ஓவியங்களை வரைந்தனர். காலை 6:00 மணிக்கு துவங்கி மதியம் ஒரு மணி வரை ஆயில் பெயின்டிங்கில் அவர்களது கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு ஓவியம் வரைந்து அசத்தினர்.
நாளை மகளிர் தினவிழா நடத்தி ஓவியம் வரைந்த மாணவிகளுக்கு பரிசு வழங்க உள்ளோம். இதுபோல மெயின் ரோட்டில் சுற்றுச்சுவருடன் கூடிய கல்லுாரிகள் ஓவியம் வரைய அனுமதி தந்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஓவியத்திற்கு ஆகும் செலவுகளையும் மற்றவர்கள் ஏற்கலாம் என்றார்.

