UPDATED : நவ 15, 2026 07:27 PM
ADDED : நவ 15, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஜெயஷீலா தலைமையில் குழந்தைகள் தின விழா நடந்தது. துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி முன்னிலை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் கேக் வழங்கப்பட்டது.
* செல்லுார் சோலை மகாலில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் நடந்த விழாவில் துணை மண்டல இயக்குநர் உமா குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார். கல்லாணை எம்.எல்.ஏ., ஆரம்பக் கல்வி அதிகாரி தென்கரை முத்துப்பிள்ளை, தாசில்தார் நாகராஜன், முரளி சுதாகரன், பிரேமா பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
