/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அம்ரூத்' திட்டத்தால் அவதிப்படும் சோழவந்தான் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
'அம்ரூத்' திட்டத்தால் அவதிப்படும் சோழவந்தான் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
'அம்ரூத்' திட்டத்தால் அவதிப்படும் சோழவந்தான் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
'அம்ரூத்' திட்டத்தால் அவதிப்படும் சோழவந்தான் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 25, 2025 04:35 AM

சோழவந்தான்: சோழவந்தான் நகரில் நடந்து வரும் அம்ருத் 2.0 திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு ஓராண்டாக அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் புதிய கிணறு, மேல்நிலை குடிநீர் தொட்டி, வீடு தோறும் குழாய்கள் அமைத்து மீட்டர் பொருத்தும் பணி நடக்கிறது. இதற்காக நகரின் பலபகுதிகளில் பள்ளம் தோண்டி குழாய்களை பதிக்கின்றனர்.
தோண்டிய பள்ளங்களால் நகரின் எல்லா பகுதிகளிலும் மேடு பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் ரோட்டில் நடமாடும் முதியோர், பெண்கள், குழந்தைகள் தடுமாறி விழுந்து காயமடைவது வாடிக்கையாகிவிட்டது. மழைக்காலம் என்பதால் பல இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
ஏற்கனவே பதித்த குழாய்கள் நல்ல நிலையில் இருப்பதால் புதிதாக மீட்டரை மட்டும் இணைத்திருக்கலாம் அல்லது சேதமான குழாய்களை மட்டுமாவது மாற்றி இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அரசுக்கு ரூ.பல கோடி மிச்சம் ஏற்பட்டிருக்கும். ஆனால் நடந்ததோ வேறு என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். தோண்டிய பள்ளங்களை விரைந்து மூடி புதிய ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுபற்றி பேரூராட்சி, அம்ருத் திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இங்கு 40 கி.மீ., நீளத்திற்கு குழாய்கள் பதிக்க வேண்டியிருந்தது. இதில் 35 கி.மீ., பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள 5 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதித்து தோண்டிய பள்ளங்கள் 'கான்கிரீட்'டால் மூடப்படும். டிசம்பருக்குள் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவு பெறும். அடுத்த மூன்று மாதத்திற்குள் ரோடு அமைத்து குழாய்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்றனர்.

