/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரு வழியாக திறந்தாச்சு சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட்
/
ஒரு வழியாக திறந்தாச்சு சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஜன 06, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்,: சோழவந்தானில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டை 3 ஆண்டுகளுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், துணை சேர்மன் லதா, வார்டு கவுன்சிலர்கள் குத்து விளக்கு ஏற்றினர். செயல் அலுவலர் செல்வகுமார், போக்குவரத்து கழக பொது மேலாளர் ராகவன், கிளை மேலாளர் லாரன்ஸ், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பங்கேற்றனர். இந்த பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வந்து செல்வதில் உள்ள சிக்கல், ஆக்கிரமிப்புகளுக்கு பேரூராட்சி, நெடுஞ்சாலைத் துறை தீர்வு காண வேண்டும்.