
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரியில் முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமையில் கிறிஸ்துமஸ் சமூக விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி வளாக மேலாளர் சுந்தர் சிங் பால் ஜோசப் துவக்கி வைத்தார். மாணவக் கிறிஸ்தவ இயக்க தலைவர் கெட்சி டேனியலா வரவேற்றார்.
நுாலக உதவியாளர் பாலின் சகாய நாயகி வேதவாசிப்பு பகுதியை படித்தார். கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்களை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் குழுவினர் பாடினர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
முதல்வர் சார்பில் பேராசிரியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது.
கிறிஸ்தவ இயக்க மாணவி ஆண்ட்ரியா வாலண்டைன், மனித வள மேம்பாட்டு மைய அலுவலர் ஹெலன் மேரி நன்றி கூறினர்.

