/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி
/
மதுரையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி
ADDED : டிச 25, 2024 06:24 AM
மதுரை : மதுரையில் நேற்று கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சர்ச்களில் நள்ளிரவில் நடந்த திருப்பலி, ஆராதனைகளில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைகையையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு சர்ச்களில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடந்தன. மதுரை கீழவெளிவீதி செயின்ட் மேரீஸ் சர்ச்சில் நடந்த விழாவில் உயர்மறை மாவட்ட பரிபாலகர் அந்தோணிசாமி சவரிமுத்து பங்கேற்று சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்.
ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் பாதிரியார் ஜோசப், பாஸ்டின் நகர் துாய பவுல் சர்ச்சில் பாதிரியார் அருள்சேகர், கே.புதுார் லுார்து அன்னை சர்ச், செங்கோல்நகர் கிறிஸ்து அரசர் சர்ச் உட்பட பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.
சி.எஸ்.ஐ., சர்ச்களில் அதிகாலை 4:30 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதேபோல திருமங்கலம், உசிலம்பட்டி, மேலுார் பகுதி சர்ச்களிலும் ஆராதனைகள் நடந்தன.