ADDED : பிப் 02, 2026 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சமயநல்லுார் புனித சூசையப்பர் பங்கு கிளையாக தோடனேரியில் இருந்த புனித இஞ்ஞாசியார் சர்ச் புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
பேராயர் அந்தோணிசாமி முறைப்படி அபிஷேகம், பூஜைகள் செய்தார். சிறப்பு அழைப்பாளரான போர்ச்சுக்கல் நாட்டு அருள் பணியாளர் நுானோ பிகேல் லோப்ஸ் த சில்வா சர்ச்சை திறந்து வைத்தார்.
பின்னர் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடந்தது. சர்ச் வளாகம், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. சமயநல்லுார் பாதிரியார்கள் மார்ட்டின் ஜோசப், பால் இக்னோசியஸ், தோடனேரி பங்கு மக்கள், நிர்வாக குழு சந்தனம், மதுரை இயேசு சபை குழுமம், பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் பங்கேற்றனர்.

