திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு
கேரள மாநில அரசு விருதுகளை தேர்வு செய்வது, கேரள மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களை நடத்துவது உள்ளிட்ட பல பொறுப்புகளை கேரள மாநில திரைப்பட அகாடமி கவனித்து வருகிறது. இதன் தலைவராக இருந்த ரஞ்சித், பாலியல் புகார் எழுந்ததால் ராஜினாமா செய்தார். தற்போது அந்த பதவிக்கு ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியரும் இசையமைப்பாளருமான ரசூல் பூக்குட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா
'அண்ணாமலை, பாட்ஷா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, 'அனந்தா' என்ற தலைப்பில் சாய் பாபா பற்றிய பக்தி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் விரைவில் ரிலீசாகிறது.
நவ.7ல் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
'ஜெயிலர் 2' படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர். சி இயக்க உள்ளாராம். கதை விவாத பணிகள் நடந்து வருகிறது. கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாளர்களாக ரஜினி மகள் ஐஸ்வர்யா, கமல் மகள் ஸ்ருதிஹாசன் இருவரும் சேர்ந்துள்ளனர். இதற்கான அறிவிப்பை கமல் பிறந்தநாளான நவ.7ல் அறிவிக்கின்றனர்.
15 ஆண்டுக்கு பின் மோகினி ரீ என்ட்ரி
தமிழில் தனது 14வது வயதிலேயே 'ஈரமான ரோஜாவே' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்தார். கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த 'கலெக்டர்' படத்தில் நடித்திருந்தார். தற்போது 15 ஆண்டுகளுக்கு பின், மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மோகினி. இயக்குனர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு துவங்குகிறது.
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் 'டிசி'
ரஜினி, கமல், விஜய், கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். நாயகியாக வாமிகா கபி நடிக்கிறார். 'டிசி' எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் தேவதாஸ் கதாபாத்திரத்தில் லோகேஷூம், சந்திரா கதாபாத்திரத்தில் வாமிகாவும் நடிக்கின்றனர். இவர்களின் பெயர் சுருக்கமே 'டிசி'. அதிரடி ஆக் ஷன் கதையில் தயாராகிறது.

