தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சினிமா 13/10

சினிமா 13/10

சினிமா 13/10


UPDATED : அக் 12, 2026 06:29 PM

ADDED : அக் 12, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:29 PM ADDED : அக் 12, 2026 06:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காதல், பிரிவு இரண்டும் அழகானது

நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்து பின் அந்த காதலை முறித்துக் கொண்டார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். காதல் பிரிவுக்கு பின் ‛‛நிம்மதி என்னை தேடி வந்தது’’ என குறிப்பிட்டு இருந்தார். இவர் நடித்துள்ள கிரேஸி கல்யாணம் படம் அக்.16ல் ரிலீஸாகிறது. பேட்டி ஒன்றில் காதல் பற்றி அனுபமா கூறியதாவது, “காதல், பிரிவு இரண்டுமே அழகானது. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள் என்பதை பொறுத்தது” என்றார்.

முன்கூட்டியே வெளியாகும் ‘ராமாயணா’

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ராமாயணா’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் என தெரிவித்து இருந்தனர். அதே சமயம் வெளிநாடுகளில் முன்கூட்டியே ரிலீஸ் என தகவல் வந்தது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்னதாகவே நவ., 5ல் உலகம் முழுவதும் ஒரே தேதியில் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா அரசியலுக்கு வருகிறாரா- விக்னேஷ் சிவன் பதில்

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் அவரது மனைவியும், நடிகையுமான நயன்தாரா அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛இப்போ அவங்க தாயார் ஆகிட்டாங்க. குடும்பத்தை, வீட்டை பார்ப்பதில் கவனம் செலுத்துகிறார். அதில் நிறைவு, சந்தோஷம் கிடைக்கிறது’’ என்றார்.

அமைச்சரிடம் பேசியது என்ன கஸ்துாரி விளக்கம்

பிரதமர் மோடி பங்கேற்ற சென்னை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஐ.ஐ.டி.,யில் நடந்த நிகழ்வில் அமைச்சர் வெங்கடரமணனுடன் சில விஷயங்களை தீவிரமாக நடிகை கஸ்தூரி பேசினார். இதை வைத்து வலைதளங்களில் இஷ்டத்திற்கு பலர் கதை கட்டினர். இதுபற்றி கஸ்தூரி கூறியதாவது, ‛‛என் நண்பர் அமெரிக்காவின் நியூயார்க் நகர் முழுக்க போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு செய்கிறார். மைலாப்பூரிலும் அதை செய்யலாம் என கேட்டேன். நல்ல விஷயம் பண்ணலாம் என்றார். பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசும் நபர்களை முட்டிக்கு முட்டி தட்டுவதற்கு முதல்வர் விஜயின் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பெண்கள் அனைவரும் துணை நிற்போம் என்றேன்’’ இவ்வாறு கூறினார்.

தர்மன் பட ரிலீஸில் மாற்றம்

ரஜினியின் ‛ஜெயிலர் 2’ இந்தவாரம் ரிலீஸாகிறது. அடுத்து கமல் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‛தர்மன்’ படத்தில் ரஜினி நடிக்கிறார். 2027 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்தனர். இந்நிலையில் கிடப்பில் இருந்த கமலின் ‛இந்தியன் 3’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு காட்சிகளை முடித்து பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனராம். இதனால் தர்மன் படம் கோடை விடுமுறைக்கு தள்ளிப்போகும் என்கிறார்கள்.

ரவி தேஜா படத்தில் பிரியங்கா, அனுஸ்வரா

‛இருமுடி’ வெற்றிக்கு பின் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ‛துலாபாரம்’ படத்தில் நடிக்கிறார் ரவி தேஜா. கிரைம் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் பிரியங்கா மோகன், அனஸ்வரா ராஜன் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். முக்கிய வேடங்களில் தருண் பாஸ்கர், ஜே.டி. சக்கரவர்த்தி நடிக்கின்றனர். விவேக் சாகர் இசையமைக்கிறார். அக்., 17 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us