UPDATED : அக் 12, 2026 06:41 PM
ADDED : அக் 12, 2026 06:37 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கருத்தபுளியம்பட்டி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இம் மக்கள் தாசில்தார் அலுவலகத்திலும், நகராட்சி தலைவர் முகமது யாசின், பொறியாளர் முத்துக்குமாரிடமும் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: குடியிருப்புகள் அருகில் நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம், தினமும் செப்டி டேங் கழிவு நீரை கொட்டுவதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
தோல் நோயும் பரவ ஆரம்பித்துள்ளது. அதனால் நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை கிடங்கை நிரந்தரமாக அகற்ற கோரி மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், தேங்கிய கழிவு நீர், குப்பையை அகற்ற உறுதியளித்ததால் பொது மக்கள் கலைந்தனர்.
