UPDATED : அக் 12, 2026 07:53 PM
ADDED : அக் 12, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சிந்தாமணி ரோட்டில் சரவணன், முத்துச்சாமி, செந்தில் ஆகியோருக்கு, பழைய பிளாஸ்டிக் மற்றும் காலி சாக்குகளை சேகரித்து வைக்கும் கோடவுன் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 2:00 மணிக்கு மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அவ்வழியே சினிமா தியேட்டருக்கு சென்றுவந்த சிலர், போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
அனுப்பானடி நிலைய அலுவலர் அசோக்குமார், தல்லாகுளம் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 5 வண்டிகள் மூலம் அதிகாலை 5:30 மணி வரை போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். சிந்தாமணி போலீசார் விசாரிக்கின்றனர்.
