sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சினிமா...

/

சினிமா...

சினிமா...

சினிமா...


ADDED : ஜூலை 28, 2025 05:56 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஜித்தை வைத்து ஆக் ஷன் படம் லோகேஷ் ஆசை

ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆக.14ல் திரைக்கு வருகிறது. கார்த்தி, கமல், விஜய், ரஜினி ஆகியோரின் படங்களை இயக்கிவிட்ட இவர் இன்னும் அஜித் படத்தை இயக்கவில்லை. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், ''அஜித்தை இயக்க ஆர்வமாய் உள்ளேன். அவரை வைத்து எனது பாணியில் ஒரு அதிரடியான ஆக் ஷன் படத்தை இயக்க வேண்டும். அவரது ஆக் ஷன் முகத்தை எனது படத்தில் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அஜித்தின் கால்ஷீட் அமைவதை பொருத்து நிச்சயம் நடக்கும்'' என்றார்.

ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி

2025ம் ஆண்டின் 7 மாதங்கள் முடிய போகின்றன. இந்த 7 மாதங்களில் தமிழ் படங்களின் எண்ணிக்கை 150ஐ நெருங்கி உள்ளது. இந்தவாரம் ஆக., 1ல் “அக்யூஸ்ட், போகி, பிளாக்மெயில், ஹவுஸ்மேட்ஸ், சென்னை பைல்ஸ்: முதல் பக்கம், சரண்டர், உசுரே மற்றும் மிஸ்டர் ஜூ கீப்பர்” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர் விக்ரமின் 64வது படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வந்தது. தற்போது நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் நாயகியாக ருக்மணி வசந்த் இணைகிறாராம்.

'ஏஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தற்போது சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கவனம் பெறுகிறார் ருக்மணி வசந்த்.

வாடகை வீட்டில் வசிப்பது ஏன் அனுபம் கெர்

40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் அனுபவம் கெர். தமிழிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசிக்கிறாராம். இதற்கான காரணத்தை அவர் கூறுகையில், “பல வீடுகளில் அப்பா இறந்த பிறகு பிள்ளைகளிடம் சொத்துக்களை பிரிப்பதில் பிரச்னை வருகிறது. இல்லையென்றால் சொத்துக்களை பிரித்த பின் பெற்றோர்களை ஆசிரமங்களில் விடுவதும் நடக்கிறது. என் நண்பர்களும் இந்த பிரச்னைகளை சந்தித்தனர். வீடு, வாசல் என சொத்தாக பிரித்துக் கொடுப்பதை விட பணத்தை பிரித்துக் கொடுப்பது எளிது என்பதால் இப்போது வரை வாடகை வீட்டில் வசிக்கிறேன்” என்கிறார்.

ராஷ்மிகாவின் 'மைசா' துவக்கம்

ராஷ்மிகா நடிப்பில் அடுத்து 'கேர்ள்பிரண்ட்' படம் வெளியாக உள்ளது. இதுதவிர 'மைசா' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ரவீந்திர புல்லே இயக்குகிறார். இதன் முதல் பார்வை ஏற்கனவே வெளியாகி ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. இப்போது ஐதராபாத்தில் இதன் படப் பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. பழங் குடியினரின் சுவாரஸ்ய உலகத்தை மையமாக வைத்து உணர்ச்சிகரமான ஆக்ஷன் த்ரில்லர் கதையில் இப்படம் உருவாகிறது.

ஆடை வடிவமைப்பாளருடன் மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டலாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தற்போது தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறி ரங்கராஜ் உடன் இருக்கும் திருமண போட்டோவை வெளியிட்டு கிரிஸ்டலா இந்த தகவலை தெரிவித்துள்ளார். ரங்கராஜிற்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரு மகன்கள் உள்ள நிலையில் அவரை பிரிந்து வாழ்கிறார். அதேப்போல் கிரிஸ்டலாவும் இயக்குனர் ஜே.ஜே. பெட்ரிக்கை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந் துவிட்டார்.






      Dinamalar
      Follow us