திருமணம் எப்போது விஜய் தேவரகொண்டா பதில்
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'கிங்டம்' படம் நாளை (ஜூலை 31) ரிலீஸாகிறது. சென்னையில் இவர் அளித்த பேட்டி: 90களில் நடக்கும் கதை, போலீஸாக வருகிறேன். ஆக் ஷன் படம் என்றாலும் அண்ணன், தம்பி பாசமும் பிரதானமாக இருக்கும். குஷி, கீதா கோவிந்தம் போன்ற காதல் படங்களால் நிறைய ரசிகைகள் கிடைத்தனர். என்னை மாதிரி மணமகன் வேண்டும் என பலர் ஆசைப்பட்டனர். இப்போது அதிக ஆக் ஷன் படங்களில் நடிக்கிறேன். மீண்டும் காதல் படங்களில் நடிக்க ஆசை. இரண்டு, மூன்று ஆண்டுகளில் எனக்கு திருமணம் நடக்கும்'' என்றார்.
'அவதார் 3' டிரைலர் ரிலீஸ்
ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் 3 படம் 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' என்ற பெயரில் தயாராகிறது. இதன் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. அற்புதமான விஎப்எக்ஸ் காட்சிகளுடன் டிரைலர் பிரம்மாண்டமாக வியக்கும் வைக்கும் வகையில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. டிச., 19ல் படம் வெளியாகிறது.
சினிமா உண்மை சொல்லும் திரிப்தி டிமிரி
பாலிவுட் நடிகையான திரிப்தி டிமிரி அடுத்து பிரபாஸ் உடன் 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க போகிறார். இவர் அளித்த ஒரு பேட்டியில், ''சினிமாவில் பின்புலம் இல்லையென்றால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காது. இரு படங்கள் தோல்வி அடைந்துவிட்டால் காணாமல் போய் விடுவோம். இதுதா ன் யதார்த்த மான உண்மை. ஆதலால் கதை மற்றும் கதாபாத்திர தேர்வில் முழு நம்பிக்கை வையுங்கள்'' என்கிறார்.
ஆக.2ல் 'கூலி' டிரைலர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படம் ஆகஸ்ட் 14ல் ரிலீஸ் ஆகிறது. ஆக., 2ல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. அன்றே படத்தின் டிரைலரும் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதில் நாகார்ஜுனா, அமீர்கான், சவுபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
நடிகர் - இயக்குனர் மோதலே 'காந்தா'
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் 'காந்தா'. தெலுங்கு, தமிழில் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர், இயக்குனர் இடையேயான மோதலை தழுவி இதன் கதை இருக்கும் என டீசரை பார்க்கையில் புரிகிறது. படம் செப்., 12ல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.
தமிழில் அறிமுகமாகும் ஆர்ஷா சாந்தினி பைஜு
மலையாள நடிகையான ஆர்ஷா சாந்தினி பைஜு, 'ஹவுஸ் மேட்ஸ்' படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் தர்ஷன் ஜோடியாக அவர் நடிக்கிறார். டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார். ஆர்ஷா கூறுகையில், என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த படக்குழுவிற்கு நன்றி. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு. ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது. நல்ல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க ஆசை என்றார்.