'சிப்பெட்'டில் உலக தரமான தொழில்நுட்ப பயிற்சி அளிப்பு: தொழில் மைய மேலாளர் தகவல்
'சிப்பெட்'டில் உலக தரமான தொழில்நுட்ப பயிற்சி அளிப்பு: தொழில் மைய மேலாளர் தகவல்
UPDATED : நவ 22, 2026 06:10 PM
ADDED : நவ 22, 2026 06:04 PM
மதுரை: சிப்பெட் நிறுவனத்தில் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட தொழில் மையம் (டிக்) பொது மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
திருவாதவூர் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல், தொழில் நுட்ப நிறுவன சிப்பெட்– சி.எஸ்.டி.எஸ்.,) வளாகத்தில் விளையாட்டு விழா, புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. சிப்பெட் இணை இயக்குநர் சிவசுப்பிரமணியன் துவக்கி வைத்து, 'மாணவர் கல்வித் திறன், உடல் ஆரோக்கியம், தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்.
பொது மேலாளர் கணேசன் பேசுகையில், வளர்ந்து வரும் பிளாஸ்டிக் உற்பத்தி துறையில் ஏராள வேலைவாய்ப்புகள் உள்ளன. சிப்பெட் நிறுவனம் உலகத் தரத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கிறது. இதை மாணவர்கள் பயன்படுத்தி தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர்களாக சாதிக்க வேண்டும் என்றார்.
பல்வேறு படிப்புகளில் சேர்க்கையான புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பேராசிரியர், தொழில்நுட்ப அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
