தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சினிமா 23/11

சினிமா 23/11

சினிமா 23/11


ADDED : நவ 22, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஷ்மிகாவின் ‛மைசா’ ரிலீஸ் தள்ளிவைப்பு

ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛மைசா’. பழங்குடியின பெண்ணாக அதிரடி ஆக் ஷன் ரோலில் நடித்துள்ளார். நவ.27ல் படம் ரிலீஸாக இருந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்ட அறிக்கையில், ‛‛தொழில்நுட்ப ரீதியாக எந்த சமரசமுமின்றி, திரையரங்குகளில் சிறந்த அனுபவத்தை வழங்கவே வெளியீட்டை தள்ளி வைத்துள்ளோம். தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் உருவாகும் இரண்டு ஹனுமான் படங்கள்

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் 2024ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛ஹனுமான்’. இதன் இரண்டாம் பாகம்‛ஜெய் ஹனுமான்’ என்ற பெயரில் தயாராகிறது. பிரசாந்த் வர்மா இயக்க, ரிஷப் ஷெட்டி நடிக்கிறார். இந்நிலையில் ஹனுமான் முதல்பாகத்தை தயாரித்த பிரைஷோ நிறுவனம் ‛ஹனுமான் 2’ உருவாகிறது என அறிவித்துள்ளது. இதை ஆனந்த் இயக்குவதாகவும், பஞ்சா வைஷ்ணவ தேஜ் நாயகனாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஹனுமான் பெயரில் இரு படங்கள் உருவாவது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமானவர் இன்னும் தென்படவில்லை -நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். திருமணம் பற்றிய கேள்விக்கு அவரளித்த பதில், ‛‛நான் திருமணத்திற்கு எதிரானவள் என்பது போல பலர் கூறுகின்றனர். அது உண்மை அல்ல. திருமணம் செய்ய ஆசை தான். இதுவரை சந்தித்தவர்களில் நான் விரும்பும் வாழ்க்கைக்கு பொருத்தமானவரை இன்னும் கண்டறியவில்லை. தற்போதைய எனது வாழ்க்கை அழகாகவும் அமைதியாகவும் உள்ளது” என்றார்.

இரு நாளில் 60 கோடி வசூல் கடந்த ‘ஓம்’

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த ‘ஓம்’ படம் நவம்பர் 20ல் வெளியானது. முதல் நாளில் இப்படம் உலகளவில் 40 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரண்டு நாட்களில் 60 கோடி வசூலை எட்டி உள்ளதாம். தனுஷ் நாயகனாக நடித்து இதுவரை வெளியான படங்களின், முதல் நாள் வசூலில் இப்படம் புதிய சாதனை படைத்துள்ளதாம்.

டிரைலரை வைத்து முடிவு செய்யாதீர்கள் - சல்மான் கான்

அபூர்வ லக்கியா இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள ஹிந்தி படம் ‛மாத்ருபூமி’. கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலை வைத்து இப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது. சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதற்கு சல்மான், ‛‛டிரைலரை பார்த்து எதையும் மதிப்பிட வேண்டாம். என்னையும், என் படத்தையும் எதிர்மறையாக பேசுவதன் மூலம் மற்றவர்கள் பயனடைகிறார்கள் என்றால் எனக்கு மகிழ்ச்சியே. காட்சி அமைப்பு, தொழில்நுட்ப அம்சங்களை தாண்டி நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் தியாகத்தையும், கதையின் உணர்வையும் முதன்மையாக கவனிக்க வேண்டும். படம் வெளியாகும் போது விமர்சனங்களுக்கு பதில் கிடைக்கும்” என்றார்.

பெண் போராளியாக நடிக்கும் இனியா

நடிகை இனியா சிறிய இடைவெளிக்கு பின் ‛வன்னி’ என்ற படத்தில் முதன்மை நாயகியாக போராளியாக நடிக்கிறார். அவருடன் கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எஸ்.ஏ.கார்த்திகேயன் என்பவர் இயக்கி, தயாரிக்கிறார். பெண் போராளியின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தையும், பெண் உரிமையை பேசும் படமாகவும் இது உருவாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us