/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ்ஸ்டாண்டை 'பாராக' மாற்றிய குடிமகன்கள்
/
பஸ்ஸ்டாண்டை 'பாராக' மாற்றிய குடிமகன்கள்
ADDED : ஜன 15, 2024 04:08 AM

சோழவந்தான், சோழவந்தானில் கடந்த 3 ஆண்டுகளுக்குப்பின் பஸ்ஸ்டாண்ட் ஜன.5ல் திறக்கப்பட்டது. இங்கு 2 தளங்களில் 20 கடைகள், ஒரு பகுதியில் புறக்காவல் நிலையம், பொருட்கள் வைக்கும் அறை, போக்குவரத்து நேர கட்டுப்பாட்டாளர், குடிநீர் உள்ளிட்ட அறைகள் உள்ளன.
இப்பகுதியில் மாடி படிக்கட்டுகளின் இருபுறமும் பயணிகள் அமரும் பகுதிகள் உள்ளன. இப்பகுதியை சமூக விரோதிகள் மதுஅருந்தும் 'பாராக' பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் திட்டமிடல் இன்றி கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தால் வாடிப்பட்டி, நகரி வழி வரும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் வர முடியாத நிலை உள்ளது.
இதனால் வாடிப்பட்டி பஸ்கள் போஸ்ட் ஆபீஸ் பகுதியிலும், நகரி வழி பஸ்கள் ரயில்வே கேட் அருகேயும் திரும்பிச் செல்கின்றன. பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள கடைகள் திறக்கப்படாததால் மதுபிரியர்கள் அமர்ந்து மது அருந்தியபின், பாட்டில்களையும், பிளாஸ்டிக் கப்புகளை வீசிச் செல்கின்றனர்.
அங்கேயே எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது என செயல்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பஸ்ஸ்டாண்ட் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைப்பதுடன், துாய்மையாக பராமரிக்க பேரூராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.