நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் சி.ஐ.டி.யு., 11வது மாவட்ட மாநாடு நடந்தது.
வரவேற்பு குழுத் தலைவர் மணவாளன் வரவேற்றார். மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். உதவி தலைவர் கிருஷ்ணன் கொடி ஏற்றினார். மாநில செயலாளர் சிவாஜி துவக்கி வைத்தார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் பிச்சை ராஜன், செயலாளர் அரவிந்தன், பொருளாளர் கவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்கள் ஊர்வலத்தை நிர்வாகி அய்யணபிள்ளை துவக்கி வைத்தார்.