/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு துவக்கம்
/
சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு துவக்கம்
ADDED : ஆக 31, 2025 04:55 AM
மதுரை: மதுரையில் சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு தலைவர் தெய்வராஜ் தலைமையில் நேற்று துவங்கியது.
முன்னதாக பேச்சியம்மன் படித்துறையில் ஊர்வலத்தை, அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார்.
வெங்கடேசன்எம்.பி., பேசுகையில், ''ஆயிரத்து 600 தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்கினால் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுவே மாதம் ரூ.ஆயிரம் உதவித் தொகையாக கொடுத்தால் பல ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும்.
இவ்வாறு எல்லாவற்றையும் ஓட்டாக பார்ப்பதால் பணம் கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். வாக்காளருக்கு நிதியை கொடுத்துவிட்டு, போராடுபவர்களை அரசு கதற விடுகிறது'' என்றார்.
மாநில உதவித் தலைவர் மகாலட்சுமி, செயலாளர் சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சுப்பையா, உதவித் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் லெனின், துணைச் செயலாளர் அழகர்சாமி பங்கேற்றனர்.