/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிட்டி சேலஞ்சர் கப் போட்டி; ஒலிம்பிக் கோல்டு அணி முதலிடம்
/
சிட்டி சேலஞ்சர் கப் போட்டி; ஒலிம்பிக் கோல்டு அணி முதலிடம்
சிட்டி சேலஞ்சர் கப் போட்டி; ஒலிம்பிக் கோல்டு அணி முதலிடம்
சிட்டி சேலஞ்சர் கப் போட்டி; ஒலிம்பிக் கோல்டு அணி முதலிடம்
ADDED : ஜன 14, 2025 11:10 PM
மதுரை; தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 'சிட்டி சேலஞ்சர் கப் 2025'க்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மதுரையில் நடந்தது. இதில் ஒலிம்பிக் கோல்டு அணி கோப்பையை வென்றது.
மதுரைக் கல்லுாரியில் நடந்த இறுதிப்போட்டியில் சேது கிரிக்கெட் பவுண்டேஷன், ஒலிம்பிக் கோல்டு பவுண்டேஷன் அணிகள் மோதின. ஒலிம்பிக் அணி 49.5 ஓவர்களில் 153 ரன் எடுத்தது. சித்தார்த் 39 ரன் எடுத்தார். உத்ரன் 4 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய சேது அணி 30.1 ஓவர்களில் 96 ரன் எடுத்தது.
ஜெய்த்ரன் 27, நிகில் ஜெகனாத் 33 ரன் எடுத்தனர். சித்தார்த் 4, பாலகிருஷ்ணன் 3 விக்கெட் வீழ்த்தினர். ஒலிம்பிக் அணி 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிட்டி சேலஞ்சர் கோப்பையை வென்றது.
மூன்றாமிடத்திற்கான போட்டியில் சேலம் சூப்பர் கிங்ஸ் அகாடமி, ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின. சூப்பர் கிங்ஸ் அணி 50 ஓவர்களில் 321 ரன் எடுத்தது. ஆத்ரேயா 108, முகமது அர்பாஸ் 101 ரன் எடுத்தனர்.
ரைஸிங் அணி 50 ஓவர்களில் 140 ரன் எடுத்தது. அஸ்வத் 29, மோனிஷ் 27 ரன் எடுத்தனர். பஸில் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். சூப்பர் கிங்ஸ் அணி 181 ரன் வித்தியாசத்தில் மூன்றாமிடம் பெற்றது.
ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த ஆல் ரவுண்டராக ஒலிம்பிக் கோல்டு அணியின் சித்தார்த், சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர் நாயகனாக சூப்பர் கிங்ஸ் அணியின் முகமது அர்பாஸ், சிறந்த பீல்டராக வி யூனிக் அணியின் பிரணவ் குமரன், சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த விருது பெற்றனர்.