
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
போட்டி முடிவுகள் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி மாணவிகள் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் ரிந்தியா, 1500 மீட்டர், 5000 மீட்டர் ஓட்டத்தில் மித்ரா, 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதலில் தரண்யா, நீளம் தாண்டுதலில் கயல்விழி, உயரம் தாண்டுதலில் தனுஷியா ஆகியோர் முதலிடம் பெற்றனர். லேடி டோக் கல்லுாரி மாணவிகள் 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டத்தில் புனிதா, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் லாவண்யா, போல்வால்ட்டில் அனுஷ் ராஜகுமாரி முதலிடம் பெற்றனர். 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் லேடிடோக் கல்லுாரி சினேகவல்லி, ஜானிஸ் ஸ்டெல்லா, சாய் சன்யுக்தா, குணஸ்ரீ ஆகியோரும் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் புனிதா, அபர்ணா, கோபிகா, லாவண்யா ஆகியோர் முதலிடம் பெற்றனர். குண்டு எறிதலில் மதுரை காமராஜ் பல்கலை சாதனா, வட்டு எறிதலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி ஸ்வாதி, ஈட்டி எறிதலில் அருப்புக்கோட்டை ரமணாஸ் கல்லுாரி யாழினி, சுத்தி எறிதலில் பாத்திமா கல்லுாரி ஹீரா முதலிடம் பெற்றனர்.
65 புள்ளிகளுடன் லேடிடோக் கல்லுாரி மாணவிகள் தடகள சாம்பியன் பட்டத்தையும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். 62 புள்ளிகளுடன் ஜி.டி.என். கல்லுாரி 2ம் இடம் பெற்றது.

