மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான பாரதியார் தினவிழா பீச் வாலிபால் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஆடவர் பிரிவு: 14 வயதுக்குட்பட்டோர் ஆடவர் பிரிவு போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி முதலிடம், பாலமேடு அரசுப்பள்ளி 2ம் இடம், சாப்டூர் அரசுப் பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் செயின்ட் பிரிட்டோ பள்ளி முதலிடம், அமெரிக்கன் கல்லுாரி 2ம் இடம், சி.இ.ஓ.ஏ., பள்ளி 3ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி முதலிடம், வி.எச்.என்., பள்ளி 2ம் இடம், சேதுபதி பள்ளி 3ம் இடம் பெற்றன.
மகளிர் பிரிவு: 14 வயது மகளிர் பிரிவில் அழகர்கோவில் ஏ.எம்.எஸ்., பள்ளி முதலிடம், நிர்மலா பள்ளி 2ம் இடம், செயின்ட் ஜோசப் பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் அழகர்கோவில் ஏ.எம்.எஸ்., பள்ளி முதலிடம், எஸ்.புளியங்குளம் அரசுப் பள்ளி 2ம் இடம், செயின்ட் ஜோசப் பள்ளி 3ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி முதலிடம், நிர்மலா பள்ளி 2ம் இடம், சத்திரப்பட்டி அரசுப் பள்ளி 3ம் இடம் பெற்றன.