ADDED : அக் 18, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் விமலா கூறியதாவது:
டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் நடப்பு ரபி சிறப்பு பருவத்தில் மக்காச்சோளம், நெல், பருத்தி பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். ஒரு ஏக்கர் மக்காச்சோளத்திற்கு ரூ.484. பருத்திக்கு ரூ.222. நெல் ரூ. 540. பிரிமியத்தை விவசாயிகள் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். பிரிமிய தொகை செலுத்த வேண்டிய கடைசி நாள் நவ.15. விவசாயிகள் பயிர்களின் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பட்டா உள்ளிட்டவற்றை பொதுச் சேவை மையங்களுக்கு கொண்டு சென்று பதிவு செய்யலாம் என்றார்.