
திருநகர்: மதுரை சோலைமலை கல்லுாரியில் பள்ளிகளுக்கு இடையே நடந்த மாவட்ட கபடி போட்டியில் திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சோலைமலை கோப்பைக்காக நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்த போட்டிகளில் 32 அணிகள் பங்கேற்றனர். நாக் அவுட் முறை போட்டிகளில் இறுதியாக முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி, ஜாஸ் மெட்ரிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. பின்பு நாக்அவுட் முறையில் நடந்த போட்டிகளில் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளி அணியினர் மற்ற மூன்று அணிகளையும் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். அந்த அணி வீரர்களை பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த், உடற்கல்வி ஆசிரியர்கள் வைரமுத்து, சபாபதி, அப்துல் அஜீஸ் பாராட்டினர்.

