/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில் அடிதடி
/
சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில் அடிதடி
ADDED : அக் 01, 2025 07:32 AM
சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே அடிதடி நடந்தது.
பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் ஈஸ்வரி, முத்துச்செல்வி, நிஷா ஆகியோர், 'பேரூராட்சியில் பெண் கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஆறு மாதங்களாக கேட்டும் வார்டில் நடக்கும் பணிகளுக்கான செலவினக் கணக்குகளை காட்டுவதில்லை.
தங்கள் வார்டுகளுக்கு முக்கியத்துவம் தராமல் மற்ற வார்டுகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது' என்றுகூறி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை செயல் அலுவலர் சமாதானம் செய்து இருக்கையில் அமரச்செய்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கிருந்த கவுன்சிலர் நிஷாவின் கணவர் கவுதம ராஜாவுக்கும், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரும், கவுன்சிலருமான கணேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சு முற்றியதால் கைகலப்பாக மாறியது. கணேசனின் ஆதரவாளர்களும், கவுதம ராஜாவும் மாறி மாறி தாக்கி கொண்டனர். செயல் அலுவலர் அறையின் கண்ணாடி கதவுகள், சேர்கள் சேதமடைந்தன. சமாதான பேச்சு வார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.