ADDED : ஜூலை 22, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: திருவாலவாயநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம், நெடுங்குளத்தில் விவசாய பணிகளுக்கான கால்வாயின் குறுக்கே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமை வகித்தார். பி.இ.ஓ., மோசஸ், தலைமை ஆசிரியர் அழகுசுந்தரம், பி.டி.ஓ.,க்கள் லட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி, உதவிபொறியாளர் மாலதி, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் சகுபர் சாதிக், சுப்பிரமணியன், பாரதிய கிசான் நிர்வாகி பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

