நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : தும்பைபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.63.54 லட்சத்தில் புதிதாக மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவ் வகுப்பறை திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் அயூப்கான் தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளங்கோவன், தலைமை ஆசிரியர் கண்மணி முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்