ADDED : பிப் 01, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி பகுதியில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட், மறவன்குளம், ஆனந்தா தியேட்டர், தெற்கு தெரு, சந்தைப்பேட்டை, பனைமர ஸ்டாப், கற்பக நகர் பகுதிகளில் உள்ள 10 பஸ் ஸ்டாப்கள் நகராட்சி தலைவர் ரம்யா, துணைத்தலைவர் ஆதவன், கமிஷனர் லிசா அறிவுறுத்தல்படி துாய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
பஸ் ஸ்டாப்களில் போஸ்டர்களை ஒட்டக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ரம்யா தெரிவித்தார்.