ADDED : செப் 19, 2025 02:34 AM
மதுரை: வீட்டு வசதி நகர்புற அமைச்சகம், குடிநீர், சுகாதாரத் துறை சார்பில், செப். 17 முதல் அக். 2 வரை நாடு முழுவதும் துாய்மைப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, மதுரை ரயில்வே கோட்டத்தில் துாய்மைப் பிரசாரத்தை மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா நேற்று துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் மற்றும் வீட்டு பராமரிப்பு மேலாளர் குண்டேவர் பாதல், கோட்டப் பணியாளர் அதிகாரி சங்கரன் பங்கேற்றனர்.
புறக்கணிக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்தல், பொது இடங்களை சுத்தமாக வைத்தல், துாய்மை தொழிலாளர்களை பாதுகாத்தல், துாய்மையான, பசுமையான பண்டிகைகளை ஊக்குவித்தல், துாய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இப்பிரசாரத்தின் குறிக்கோள்கள். செப். 25ல் சிறப்பு சுத்தம் செய்யும் பணியில், தன்னார்வலர்களாக பங்கேற்க அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.