/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாலுபுறமும் அடைபட்ட கழிவுநீர் கால்வாய்கள்
/
நாலுபுறமும் அடைபட்ட கழிவுநீர் கால்வாய்கள்
ADDED : ஜூலை 29, 2025 01:21 AM

உசிலம்பட்டி,: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 14 கருக்கட்டான்பட்டி மாரியம்மன் கோயில் தெரு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்தப்பகுதியில் இருந்த காலியிடத்தில் சேர்ந்து வந்தது. சமீப காலமாக அந்தப்பகுதியில் வீடுகள் கட்டத் துவங்கியுள்ளனர். இதனால் கழிவு நீர் செல்வதில் தடை ஏற்பட்டு தெருக்களில் தேங்குகிறது.
மாரியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கழிவுநீரை வெளியேற விடாமல் அந்தப்பகுதியினர் போட்டி போட்டு நான்கு புறமும் கற்கள், மண்ணைப் போட்டு அடைத்துள்ளனர்.
குடிநீர் வழங்கும் போது வெளியேறும் அதிகப்படியான கழிவுநீர் தெருக்களில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்துகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இந்தப்பகுதியில் சாக்கடை கட்டுவதற்காக ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதுவரை பொறுக்கமுடியாத மக்கள் இவ்வாறு கால்வாயை அடைத்து வைத்துள்ளனர். தற்போது தெருவில் தேங்கும் சாக்கடை கழிவுநீரை வாகனம் மூலம் தற்காலிகமாக அகற்றி வருகிறோம்' என்றனர்.