/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயம்
/
முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயம்
ADDED : பிப் 09, 2025 05:10 AM
திருமங்கலம்: திருநெல்வேலியில் முதல்வரின் பாதுகாப்புக்கு சென்று திரும்பிய வாகனம் மோதியதில் திருமங்கலத்தில் ரோட்டை கடக்க முயன்ற வங்கி ஊழியர் காயம் அடைந்தார்.
நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடந்த முதல்வரின் பயண திட்டத்தில் பாதுகாப்புக்காக வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கான பொருட்களை கொண்டு சென்ற வாகனம் நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் வழியாக மதுரைக்கு சென்றது. அப்போது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் அரசு வங்கியில் ஊழியராக வேலை செய்யும் திருமங்கலம் மறவன்குளம் வடிவேலன் 40, விடுமுறைக்காக வந்திருந்தார். அவர் இரவில் அப்பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்று விட்டு ரோட்டை கடக்க முயன்ற போது முதல்வரின் பாதுகாப்புக்காக சென்று விட்டு வந்த வாகனம் மோதியதில் காயம் அடைந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.