ADDED : நவ 12, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட கவுரவ செயலாளர் ஆசிரிய தேவன், கவுரவ தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர். சங்கங்கள், பணியாளர்களை முடக்கும் செயல்பாடுகளை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் நவ. 18 ல் மதுரையை சுற்றியுள்ள ஆறுமாவட்ட பணியாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.