/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2024 06:31 AM
மதுரை: மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மதுரை நிர்வாகிகள் ராஜா, கணேசன், பாரூக்அலி, செல்வம், சோமசுந்தரம், நீதிமுத்தையா, சுமதி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை கவுரவ செயலாளர் ஆசிரிய தேவன் செய்திருந்தார்.
கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்வதற்காக ரேஷன் கடையில், பெண் பணியாளர்களை இரவு 10:00 மணி வரை வேலை செய்யச் சொல்லக்கூடாது. சந்தையில் விற்பனை ஆகாத சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை விற்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. நகைக் கடன் ஏல இழப்பீடு தொகைக்கு செயலாளர்களை பொறுப்பாக்கி ஓய்வு காலத்தில் துன்புறுத்தக்கூடாது. கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் அளவு லாரி, டிராக்டர் வாங்கச் சொல்வதை கைவிட வேண்டும் என்பவை உட்பட 26 அம்சங்களை வலியுறுத்தி பேசினர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மார்ச் 25 முதல் ரேஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக தெரிவித்தனர்.

