/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூட்டணி கணக்குகள் டிசம்பருக்குள் தெரியும்
/
கூட்டணி கணக்குகள் டிசம்பருக்குள் தெரியும்
ADDED : ஆக 26, 2025 04:02 AM

உசிலம்பட்டி: '' தமிழகத்தில் எத்தனை அணிகள் ஒன்று சேரப் போகிறது. என்ன என்ன கூட்டணி அமைய போகிறது ''என டிசம்பருக்குள் அனைவருக்கும் தெரிய வரும்'' என அ.ம.மு.க, பொதுச்செயலர் தினகரன் கூறினார். உசிலம்பட்டியில் அ.ம.மு.க.,தொகுதி நிர்வாகிகள் கூட்டம், பொதுச் செயலர் தினகரன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை, உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி நகர், எழுமலை பேரூராட்சி,கிளை நிர்வாகிகள் மற்றும் பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் பங்கேற்றனர்.
முன்னதாக தினகரன் கூறியதாவது:தே.ஜ., கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார்.
அவர் துணை ஜனாதிபதி ஆவதும், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் நமக்கு பெருமை சேர்க்க கூடிய விஷயம் தான். த.வெ.க., மாநாட்டில் விஜய் எந்த எந்த கட்சியை பற்றி பேசினாரோ அவர்கள் பதிலளிப்பர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, காமராஜர் போன்ற தலைவர்களை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் இன்னும் எத்தனை நுாற்றாண்டுகள் ஆனாலும் அரசியல் செய்ய முடியாதுபழனிசாமி பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் பாத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் . அவர்கள் நிச்சயமாக பதில் அளிப்பார்கள்.
தேர்தலையொட்டி வரும் டிசம்பருக்குள் தமிழகத்தில் எத்தனை அணிகள் ஒன்று சேரப் போகிறது.
என்ன என்ன கூட்டணி அமைய போகிறது என அனைவருக்கும் தெரிய வரும்.அ.ம.மு.க., வின் தொண்டர்கள் பல்வேறு சோதனைகளையும், பிரச்னைகளையும் தாண்டி செயல்படுகின்றனர். 2026 தேர்தலில் சரியான முத்திரை பெறும். தேர்தலுக்கான சுற்றுப் பயணங்கள் விரைவில் நடைபெறும் என்றார்.