ADDED : டிச 05, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: நிலையூர் திருப்பதி நகர் கிருஷ்ணன். இவர் வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை கார் இன்ஜின் பகுதியில் இருந்து சத்தம் வந்தது.
திறந்து பார்த்தபோது உள்ளே நாகப்பாம்பு இருந்தது. கதவை மூடிய அவர், பாம்பு பிடி வீரர் பாபுவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து 5 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.