UPDATED : நவ 17, 2026 07:16 PM
ADDED : நவ 17, 2026 07:16 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளநிலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் டி.
கல்லுப்பட்டி காடனேரி கிராமம் சென்றனர். மாணவிகள் கார்ல் மார்க்ஸ், காவேரி, லினிஷா, மகாலட்சுமி, மோனிகா ராணி, சவுமியா, விஷாலினி, அனுஸ்ரீ, நவ்யா ஆகியோர் தென்னை டானிக் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தென்னை மரத்தில் குரும்பை உதிர்வதைத் தடுத்து காய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு மரங்களுக்குத் தேவையான நுண்ணுாட்டசத்துகளை வழங்கி நோய், பூச்சி தாக்குதல்களில் இருந்து மரத்தைப் பாதுகாப்பதாக விவசாயிகளிடம் தெரிவித்தனர்.
