ADDED : ஆக 24, 2025 04:06 AM
பேரையூர்: கரையான்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆலோசனை கூற தோட்டக்கலைத் துறையினரை காணவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
பேரையூர், சின்னப்பூலாம்பட்டி, சாப்டூர், அத்திபட்டி, சேடப்பட்டி பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. இதன் அடிப்பகுதியில் கரையான்கள் அரித்து வருகின்றன. மரங்களின் பெரும் பகுதியை கரையான்கள் மண்ணை உற்பத்தி செய்து அவற்றிலிருந்து கொண்டே மரத்தின் பட்டைகளை சாப்பிட்டு அரித்து வருவதால் மரத்திற்கு செல்லும் நுண்ணுாட்ட சத்துக் குறைவால் தேங்காய்கள் சிறுத்து வருகிறது.
விவசாயிகள் கூறுகையில், ''கரையான்கள் மரத்தில் மண் கூடு போல் தேங்கியுள்ளது. பனை மரத்தையும் விட்டு வைப்பதில்லை. காய்கள் உற்பத்தி பாதிக்கிறது. தோட்டக்கலை துறையினர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. டி.கல்லுப்பட்டி தோட்டக்கலை அலுவலகத்தில் யாரும் இருப்பதில்லை'' என்றனர்.