ADDED : நவ 24, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர், டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, சாப்டூர், அத்திபட்டி உள்ளிட்ட பகுதியில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள், பெரியவர்கள் சளி, இருமலால் அவதிப்படுகின்றனர். காய்ச்சலால் உடல் வலி ஏற்பட்டு, உடல் சோர்வு ஏற்படுகிறது. சிலருக்கு இருமலால் தொண்டையில் வலி ஏற்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்து விட்டால் தொற்று போல் பரவி வீட்டில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் வந்து அவதிப்படுகின்றனர்.
டாக்டர்கள் கூறுகையில்,'இந்த வைரஸ் காய்ச்சல் 4 முதல் 6 நாட்கள் வரை இருக்கும்' என்றனர்.

