ADDED : ஏப் 26, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறிகள், பூக்களின் தரம் குறையாமல் பாதுகாக்கும் வகையில் முன் குளிரூட்டப்பட்ட கிடங்கு அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
ஆறு டன் கொள்ளளவுள்ள கிடங்கு அமைத்த பின், 35 சதவீதம் வீதம் அதிகபட்சமாக ரூ.8.75 லட்சம் மானியம் வழங்க மதுரைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன் மூலம் வேளாண் கட்டுமான நிதியின் கீழ் 3 சதவீத வட்டித்தொகை தள்ளுபடிக்காக விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள விவசாயி, தொழில்முனைவோர் தோட்டக்கலை துணை இயக்குநர் அல்லது அந்தந்த வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார்.