/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கலெக்டர் ஆஜர்
/
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கலெக்டர் ஆஜர்
ADDED : பிப் 06, 2025 06:08 AM
மதுரை; திமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர் சங்கீதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார்.
பேரையூர் அருகே கே.பெருமாள்பட்டி பாண்டியராஜன் தாக்கல் செய்த மனு: எனது தாய் பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உதவி சமையலராக பணிபுரிந்தார். 2018 ல் பணியின்போது இறந்தார். கருணை அடிப்படையில் எனக்கு பணி நியமனம் வழங்கக்கோரி கலெக்டர், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய கமிஷனருக்கு மனு அனுப்பினேன். கருணைப் பணிக்கு தகுதியற்றவர் எனக்கூறி நிராகரித்தனர். அதை ரத்து செய்து பணி நியமனம் வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
தனி நீதிபதி,' நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பணி நியமனம் வழங்க வேண்டும்,' என 2024 மார்ச் 15 ல் உத்தரவிட்டார். அதை எதிர்த்து கலெக்டர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதால் கலெக்டர் சங்கீதாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். கலெக்டர் சங்கீதா ஆஜரானார்.
அரசு தரப்பு: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: வரும்காலங்களில் இவ்வழக்கில் கலெக்டர் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விசாரணை மார்ச் 17 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.