தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின்னணு ஓட்டுப்பதிவு செயல் விளக்கம் கலெக்டர் துவக்கி வைத்தார்

 மின்னணு ஓட்டுப்பதிவு செயல் விளக்கம் கலெக்டர் துவக்கி வைத்தார்

 மின்னணு ஓட்டுப்பதிவு செயல் விளக்கம் கலெக்டர் துவக்கி வைத்தார்


ADDED : ஜன 22, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சட்டசபை தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல்விளக்கத்தை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டத்தில் பத்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் பயன்படுத்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த இயந்திரங்களில் பழுதானவை உள்ளதா என அரசியல்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த இயந்திரங்களில் ஓட்டுக்களை பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் வருகையால் இதை செயல்படுத்தும் அவசியம் எழுந்துள்ளது. இதையடுத்து நேற்று செயல்விளக்க முறையை கலெக்டர் பிரவீன் குமார் துவக்கி வைத்தார். நேர்முக உதவியாளர் ரங்கநாதன், தாசில்தார் இளமுருகன் பங்கேற்றனர். மதுரை, மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் இந்த 'டெமோ' நடத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு மின்னணு இயந்திரம் குறித்த விவரத்தை கொண்டு சேர்க்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் ஜன.25 முதல் இந்த செயல்பாடுகள் தாலுகா அளவில் நடக்க உள்ளது. தொடர்ந்து பத்து தொகுதிகளிலும் தினமும் பஸ் ஸ்டாண்ட், முக்கிய சந்திப்புகள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் சென்று ஓட்டுப்பதிவு முறையை செயல்படுத்த உள்ளனர்.

மொபைல் வேன்களிலும் தெருக்களில் சென்று நேரடி செயல்விளக்கம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 308 மின்னணு இயந்திரங்களை (கன்ட்ரோல் யூனிட், ஓட்டுப்பதிவு இயந்திரம், வி.வி.பேட்., ஆகியவற்றை) கொண்டு சென்று செய்து காட்ட உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us