தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புகைப்படக் கண்காட்சி

 புகைப்படக் கண்காட்சி

 புகைப்படக் கண்காட்சி


ADDED : ஜன 22, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தமிழ்த்துறை, கள்ளிக்குடி சித்தர்கூடம் சார்பில் தமிழரின் தொன்மை, அறிவியல், மருத்துவம், வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.

முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். தமிழ்த் துறை தலைவர் கார்த்திகாதேவி வரவேற்றார். பழங்கால குமரிக்கண்டம், கற்கால ஆயுதங்கள் முதல் இரும்பு கால ஆயுதங்கள், நீர் சுத்திகரிப்பு, கடல் மேலாண்மை, வானவியல் ஆய்வு, எண் கணிதம், தமிழ் மருத்துவ மேலாண்மை, தமிழ் எழுத்துக்களின் சிறப்புகள், அகத்தியர், திருமூலர், நந்திதேவர் உருவாக்கிய விஷ முறிவு மேலாண்மை, பூச்சி மருந்து, ஒலி, ஒளி, நீண்ட ஆயுளுக்கான காயகல்ப முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

பேராசிரியர்கள் கணேஷ்பிரபு, ரேணுகாதேவி, சமுத்திரசெல்வி, முருகேஸ்வரி, பிரகாசு ஒருங்கிணைத்தார். சித்தர்கூடம் அறவோன், ஜோதிசுப்ரமணியம், மோதிலால் நேரு ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us