/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பருவமழையை எதிர்கொள்ள 125 முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்
/
பருவமழையை எதிர்கொள்ள 125 முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்
பருவமழையை எதிர்கொள்ள 125 முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்
பருவமழையை எதிர்கொள்ள 125 முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்
ADDED : அக் 14, 2025 04:13 AM

மதுரை: பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு தொடர்பாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை நடந்தது.
தீயணைப்பு தென்மண்டல துணைஇயக்குனர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன், கூடுதல் அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் நகர், தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டனர். கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நகரில் 78, புறநகரில் 47 என 125 முகாம்கள் ஏற்படுத்தப்படும். 300 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுவர்.
அனைத்து மழைநீர் கால்வாய்களும் துார்வாரும் பணி நடந்துள்ளது. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை கண்டறிந்துள்ளோம். மேகவெடிப்பு ஏற்பட்டால் கூட அதை சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.