/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் அக்.22 முதல் கந்த சஷ்டி திருவிழா அக்.27 சூரசம்ஹாரம்
/
குன்றத்தில் அக்.22 முதல் கந்த சஷ்டி திருவிழா அக்.27 சூரசம்ஹாரம்
குன்றத்தில் அக்.22 முதல் கந்த சஷ்டி திருவிழா அக்.27 சூரசம்ஹாரம்
குன்றத்தில் அக்.22 முதல் கந்த சஷ்டி திருவிழா அக்.27 சூரசம்ஹாரம்
ADDED : அக் 14, 2025 04:12 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
அன்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து, உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். விரதமிருக்கும் பக்தர்களுக்கு காலை 9:00 மணிக்கு மேல் காப்பு கட்டப்படும். திருவிழா நாட்களில் தினம் காலை 8:30 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜையும், காலை 11:00, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனையும், இரவு 7:00 மணிக்கு தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
வேல் வாங்குதல் முக்கிய நிகழ்ச்சியாக அக். 26 மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணிக்குள் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அக். 27ல் சூரசம்ஹார லீலை, அக். 28 காலையில் கிரி வீதி, ரத வீதிகளில் சிறிய வைரத் தேரோட்டம், மாலை 4:00 மணிக்கு மூலவர்களுக்கு தைல புண்ணியாக வாசனமாகி பாவாடை நைவேதன தரிசனம், தீபாராதனை நடைபெறும்.
துணைகமிஷனர் பணியிடம் கோயிலுக்கு துணை கமிஷனர் உடனடியாக நியமிக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் வலியுறுத்தி உள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: துணை கமிஷனர் சூரிய நாராயணன் பதவி உயர்வில் திருச்சி சமயபுரத்திற்கு இடமாற்றப்பட்டார். இவரது பணியை கூடுதலாக கள்ளழகர் கோயில் துணைகமிஷனர் கவனிக்கிறார். 20 நாட்களுக்கு மேலாகியும் துணை கமிஷனர் நியமிக்கப்படவில்லை. கந்தசஷ்டி விழா துவங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க துணைகமிஷனர் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.