/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..
/
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..
ADDED : அக் 14, 2025 04:12 AM

மதுரை: மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,), மதுரை டாட் காம் இன்போவே என்ற ஐ.டி., நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குனர் சுப்பிரமணியன், ஐ.டி., நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சி.ஆர். வெங்கடேஷ் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்முனைவுத் திறன்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தொழில்நுட்ப அபிவிருத்தி துறைகளில், நடைமுறை பயிற்சி, இன்டர்ன்ஷிப், கூட்டு ஆராய்ச்சி வாய்ப்பு வழங்கப்படவுள்ளன.
எம்.பி.ஏ., மாணவர்களிடம் பேசிய சி.ஆர்., வெங்கடேஷ், 'தொழில்முனைவு பயணங்களை பகிர்ந்துகொண்டு புதிய தலைமுறையினர் புதிய சிந்தனைகளுடன் தொழில்முனைவில் முன்னேற வேண்டும்' என ஊக்கமளித்தார். பேராசிரியர்கள் கார்த்திக் பாபு, சிவஜோதி, ஐ.டி., நிறுவன மனித வள மேலாளர் ஹேமலதா பங்கேற்றனர்.