ADDED : ஆக 08, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.5.90 கோடியில் புதிதாக அலுவலகம் கட்டப்படுகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரவீன் குமார் பார்வையிட்டார்.
ஆண்டிபட்டி பங்களாவில் உள்ள வன அலுவலகத்தில் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.85 லட்சத்தில் அமைந்துள்ள நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்த செடிகளின் ரகங்கள், விற்பனை குறித்து கேட்டறிந்தார்.
கட்டக்குளத்தில் கலைஞர் கனவு இல்ல பணிகள், ஆண்டிபட்டியில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
தாசில்தார் ராமச்சந்திரன், பி.டி.ஓ.,க்கள் லட்சுமிகாந்தம், கிருஷ்ணவேணி, துணைத் தாசில்தார் செந்தில்குமார், ஆர்.ஐ., ராமர், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

