ADDED : டிச 17, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் நாளை (டிச.18) 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்'' திட்ட முகாம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடக்க உள்ளது.
தாலுகா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், கிராமங்களில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அதிகாரிகள் ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து ஆய்வு குறித்த விளக்கக் கூட்டமும் நடைபெறும்.
கூட்டம் முடிந்த பின் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் கலெக்டர் நேரடியாக மனுக்களை பெறுவார்.
இரவு உசிலம்பட்டியில் தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.