நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் ஒன்றிய பகுதிகளில் வேளாண் திட்டங்களை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் சூடோமோனஸ், விரிடி மற்றும் முட்டை ஒட்டுண்ணி உற்பத்தி முறைகளையும், விநாயகபுரம் மாநில விதை பண்ணையில் துவரை விதைப்பண்னையையும் பார்வையிட்டார்.
பிறகு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பண்ணை வாயில் வர்த்தகம், இயற்கை நெல் சாகுபடி, தென்னை பரப்பளவு குறித்து கேட்டறிந்தார். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறைகளையும், அறிவுசார் மையத்தையும் ஆய்வு செய்தார். இணை இயக்குனர் சுப்புராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி உடன் இருந்தனர்.